9/29/2006

மனமுவர்ந்த மரணம் பற்றி...

தீராத வேட்கையின்
வெட்கையினால்
உடைந்து பரவும்
உடலுறுப்புகள்
ஆழ்ந்த உறக்கத்தின்
திடுக்கிடலாய்
வெளிப்படும்
உறவு.

மொழிபெயர்ப்புகள் சில...


Translations of verses by Thich Nhat Hanh
appear in Dharma Rain: Sources of Buddhist Environmentalism, an anthology edited
by Stephanie Kaza and Kenneth Kraft, Shambhala, Boston & London, 2000.

recycling

குப்பை மாறியது ரோஜாவாக
ரோஜாவும் எருவாக
எல்லாம் மாறுகின்றது
நிலையாமை கூட நிலைப்பதில்லை

watering the garden

நீரும் ஒளியும்
பச்சையமாக்குகின்றது.
ப்ரியமெனும்
மழை பொழிகையில்

பாலையும் கூட
மாறுவதுண்டு
ஆழ்ந்த பசுங்கடலென.

walking

மனதிற்கோ
ஆயிரம் திசைகள்.
ஆனால் இப்பாதையில்,
அமைதியாக
எனது பயணம்.
ஒவ்வொரு காலடியிலும்
இளந்தென்றல்
ஒவ்வொரு காலடியிலும்
ஒரு மலர்.


sweeping

சிரத்தையுடன்
புத்தொளித் தளத்தை
துடைக்க
பகிர்தலெனும் விருட்சம்
ஊற்றெடுத்தது
நிலத்திலிருந்து

watering plants

ப்ரியமான செடியே
தனியாளென வருந்தாதே
இந்நீரலைகள் வருவது
மண்ணிலிருந்தும்

ஆகாயத்திலிருந்தும் தான்.
இந்நீரே மண்.
நாமெல்லாம்
ஒன்றாயிருக்கிறோம்

நெடுங்காலமாக.

contemplating the food

இத்தட்டு நிறைய
உணவு
வாசனையாய், பசி தூண்டுவதாய்
கூடவே
மிகுந்த வாதைகளுடன்.

நன்றி:http://www.hinduonnet.com/folio/fo0109/01090140.htm



கவிதை பற்றி...





sickness of mind என
கெக்கெலிப் போடும்
புத்தி.
சித்தமோ
சிவனுடன்
உரையாடும்1
மௌனமாக.
பேனா முனையில் கிழிபடும்
காகிதமாக
மனது.

(ஆத்மாநாம் நினைவாக)
1.speaking of siva - A.K.Ramanujam
picture courtesy:http://en.wikipedia.org/wiki/William_Blake

9/16/2006

மீட்சி...சாத்தியமா?


...மீண்டும் ஒரு முறை ரஷ்ய கவிஞர் செர்கய் யெஸ்னினின் கவிதை வரியுடன்தொடங்குகிறேன்


WHOM SHALL I CALL UPON TO SHARE THE WRETCHED HAPPINESS OF BEING ALIVE.

மேற்கண்ட வரிகள் வலைப்பக்கங்களுக்கும் பொருந்தும் போலும்.


மேலும் சில கவிதை வரிகள்...

ஒரு காலை முன்னாலும்
மற்றொரு காலை பின்னால் வைப்பதினாலேயே
நடை
சாத்தியமாகிறது.
(நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள், (1981)
தொகுப்பிலிருந்து)



1 …பாதையெல்லாம்
முட்புதர்கள்
வெவ்வேறு கூர்மையுடன்…

2. …எல்லாம் அடைய முடியும் தூரத்தில்
இடையில்
தடையாய்
எச்சில் பருக்கைகள்…

3.

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது

ஆவி பறக்கிற உன் காமம்.

பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிறவக்கிரம்

அனைத்தையும்உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.

காணாமல்போன சீப்பைமுன் வைத்துநிலைக் கண்ணாடி உடைக்கிற
என்கோபத்தைஉறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.

மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்குநீர் வார்க்கிறது உன் முத்தம்.

விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலைஎன் வாயோரங்களிலிருந்து
துடைத்துக்கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.

எஞ்சிய என் கருத்த கசடுகளின்ரகசிய அம்பு எய்யப்படக்காத்திருக்கிறது உன்
உந்திச்சுழி.

குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன்
யோனியில்.

அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்சொல்கிறார்கள்.வீட்டுக்கு வெளியில்நான் விடுகின்ற
மூச்சு

(கல்யாண்ஜி கவிதைகள்,
தொகுப்பிலிருந்து).


மொத்தத்தில் எனது வலைத் தளம்,
நகுலனின் படைப்பு மொழி போல் பிறரின் மொழியூடாக எனது சாயையை(!)
கண்டறியும் ஓரு
நிகழ்வு.

மறைந்த நண்பர்கள்
மோகன், பாண்டி நினைவுகளுடன்
பதிய தொடங்குகிறேன்.